நடிரும் தவெக தலைவருமான விஜயின் கடைசி படமான “ஜனநாயகன்” பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தணிக்கை சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த சூழலில் முழு ஜனநாயகன் திரைப்படம் ஹெச்டி தரத்தில் இணையத்தில் வெளியாகி ஒட்டுமொத்த திரையுலகினரையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த கசிவு விவகாரத்தில் படக்குழு, ஆளும் கட்சிகள், தணிக்கை வாரியம் என பல்வேறு தரப்பினர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில் திரைப்படம் கசிந்த விவகாரம் தொடர்பாக 6 நபர்களை தமிழக சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையில் இணையத்தில் வெளியான ஜனநாயகன் படத்தில் ‘எடிட்டர் ரெபரன்ஸ்’ போன்ற குறியீடுகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இது எடிட்டிங் அல்லது போஸ்ட் புரொடக்ஷன் நிலையிலிருந்து தான இந்த கசிவு நிகழ்ந்திருக்கலான என்று சந்தேகம் எழுப்பட்டது.
இந்த நிலையில் ஜன நாயகன் பட கசிவு விவகாரம் தொடர்பாக பட எடிட்டர் பிரதீப். E. ராகவ் ஆகியோருக்கு தென்னிந்திய எடிட்டர் யூனியன், பெப்சி மற்றும் 10க்கும் மேற்பட்ட எடிட்டர்கள் குழு ஆதரவு தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி கூறியதாவது ;
ஜனநாயகன் லீக் விவகாரம் தொடர்பாக எடிட்டர் மற்றும் அவரது குழுவினர் மீது குறை சொல்லக்கூடாது. விசாரணை முடியும் வரை யார் மீதும் பழி போடக்கூடாது. காவல்துறையினர் குற்றவாளிகளை நெருங்கி விட்டார்கள். இந்த விவகாரத்தில் விரைவில் தீர்வு எட்டப்படும். படத்தின் எடிட்டர் மீது குறை சொல்ல வேண்டாம்.
ஜன நாயகன் படத்தின் எடிட்டர் பிரதீயின் மனைவி கர்ப்பமாக இருக்கிறார். அவர் அழுது கொண்டு இருக்கிறார். ஆகவே யார் மீதும் தவறாக குற்றம் சொல்ல வேண்டாம். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள்







