திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி: தொண்டர்கள் உற்சாகம்

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில், திமுகவினர் பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர். இந்த வெற்றியை திமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடிவருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியை 10 ஆண்டுகளுக்கு பிறகு, திமுக தனிப்பெரும்பான்மையுடன்…

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில், திமுகவினர் பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர். இந்த வெற்றியை திமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடிவருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியை 10 ஆண்டுகளுக்கு பிறகு, திமுக தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியது. 18 வார்டுகளை கொண்டு பல்லடம் நகராட்சியில் திமுக, அதிமுக மற்றும் சுயேட்சை என மொத்தம் 113 பேர் போட்டியிட்டனர்.

இந்நிலையில் பல்லடம் நகராட்சியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.
இரண்டு சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், திமுக 12 வார்டுகளிலும், அதிமுக ஒரு வார்டிலும், பாஜக 2 வார்டுகளிலும் மற்றும் காங்கிரஸ், மதிமுக, சுயேட்சை ஆகிய கட்சிகள் தலா ஒரு வார்டுகளிலும் வெற்றிபெற்றனர்.

அண்மைச் செய்தி: ‘கல்வி நிறுவன வளாகங்களில் ஹிஜாப் அணிய தடையில்லை’ – பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் கர்நாடகா அரசு விளக்கம்

பல்லடம் நகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு, திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. இந்த வெற்றியை திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், மேளதாளம் முழங்க மலர்களை தூவியும், உற்சாகமாக கொண்டாடி வரிகின்றார்கள்.

அதேசமயம், திமுக தலமைக் கழக வளாகத்தில், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “தேர்தல் வெற்றியை ஆடம்பரமாக கொண்டாடாமல் அமைதியாக கொண்டாடுங்கள்” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய  News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.