முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தொகுதியில் வெற்றிவாய்ப்பு அதிகளவில் உள்ளது: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

‘சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் தான் வெற்றிபெற வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது என திமுக சார்பில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் நியூஸ் 7 தமிழுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், “நான் வேட்பு மனு அளித்தேன் தலைவர் எனக்கு திருவல்லிக்கேணி தொகுதியில் வாய்ப்பளித்து உள்ளார். நேற்றிலிருந்து கட்சி நிர்வாகிகளையும் பொதுமக்களையும் சந்தித்து வருகிறேன். சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றிபெற்று இங்குள்ள சாலை வசதிகள் மற்றும் சாக்கடை பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். தொகுதிகள் மக்கள் எனக்கு சிறப்பான முறையில் மக்கள் வரவேற்பு அளித்து வருகிறார்கள். நான் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற வாய்ப்பு அதிக அளவில் இருக்கும் என்று நம்புகின்றேன்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொகுதி மக்களின் பிரச்சினைகளை பற்றி தெரிந்துகொள்ள பல்வேறு சங்கங்களை போய் சந்தித்தேன், இதில் மீன் விற்பனையாளர்கள் சங்கங்கள் சில கோரிக்கைகளை கொடுத்துள்ளனர். இந்தப் பிரச்சினைக்கான தீர்வை கண்டிப்பாக நான் வெற்றிபெற்ற பிறகு தீர்த்து வைப்பேன் என்று கூறியுள்ளேன்.

தேர்தலில் யார் வெற்றிபெறவேண்டும் என தமிழக மக்கள் தெளிவாக இருக்கின்றனர். தேர்தல் அறிக்கையில் மட்டுமல்ல. கடந்த ஏழெட்டு மாதங்களாக திமுக என்ன சொல்கின்றதோ ஸ்டாலின் என்ன சொல்கின்றாரோ, அதைத்தான் தமிழக முதல்வர் செய்துகொண்டிருக்கிறார். மக்கள் கோரிக்கை வைத்தால் முதலில் முடியாது என்பார் பிறகு நிதி நெருக்கடி என்று கூறுவார் அதன்பின் தேர்தல் நெருங்க நெருங்க எல்லாத்தையும் செய்ய ஆரம்பித்துவிடுவார். அதே மாதிரி தான் அவர்களுடைய தேர்தல் அறிக்கையும் இன்று இருக்கும் என்று நான் நம்புகின்றேன்”

திமுக வேட்பாளர் பட்டியலில் திருநங்கைகள் இடம்பெறாதது குறித்த கேள்விக்கு, “திருநங்கைகளுக்காக வாரியம் அமைத்து அவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செய்தது கலைஞர் ஆட்சியில்தான். அதேபோல் தேர்தல் அறிவிப்பு என்பது மிகக் குறைந்த காலகட்டத்தில் நடந்துள்ளது. ஆனால் வருகின்ற காலத்தில் பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் செய்துள்ளார் கண்டிப்பாக வருங்காலத்தில் நாங்கள் செய்வோம்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அக்னிவீர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை – உ.பி, ஹரியானா அறிவிப்பு

Mohan Dass

புதுச்சேரி போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 5வது நாளாக வேலை நிறுத்தம்!

Web Editor

 ”சித்த மருத்துவ பல்கலைக்கழகம்” – அமைச்சர் தகவல்

Vel Prasanth