ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை சிட்டி அணி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
கோவாவில் நேற்று நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து போட்டி தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை சிட்டி, ஏ.டி.கே.மோகன் பகான் எப்சி அணிகள் மோதின. இதில் மோகன் பகான் அணியின் வீரர் வில்லியம்ஸ் 18வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். தொடர்ந்து 29வது நிமிடத்தில் மோகன் பகான் அணியின் வீரர் டிரி, same side கோல் அடித்ததால், முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் ஒன்றுக்கு- ஒன்றுக்கு என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.
தொடர்ந்து இரண்டாவது பாதியில் இருஅணிகளும் கோல் அடிக்க கடுமையாக முயன்றன. இந்நிலையில் ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் மும்பை வீரர் பார்தோலெமெவ் பாஸ் செய்த பந்தை பிபின் சிங் வெற்றிக்கான கோலினை அடித்தார். இதனையடுத்து மும்பை அணி 2-க்கு1 என்ற கணக்கில் மோகன்பகான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.







