‘நட்பா நட்பில்லையா என்பதை திமுக தான் முடிவு செய்ய வேண்டும்’ – நயினார் நாகேந்திரன்

பாஜக மத்திய அரசு, திமுக மாநில அரசு அவ்வளவுதான் எப்போதும் பாரதிய ஜனதா கட்சி ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளது என் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லை சந்திப்பு…

பாஜக மத்திய அரசு, திமுக மாநில அரசு அவ்வளவுதான் எப்போதும் பாரதிய ஜனதா கட்சி ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளது என் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நெல்லை சந்திப்பு முத்தாரம்மன் கோவிலில் ஆடி மாத கொடை விழா இன்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும் பாஜக சட்டமன்ற கட்சி தலைவருமான நயினார் நாகேந்திரன் துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மாநில அரசு மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மக்களுக்கு நன்மையாக இருக்கும் என்றும் மாநில அரசு மத்திய அரசோடு ஒன்றிணைந்து செயல்படாவிட்டால் வாக்களித்த மக்களுக்கு இழப்பாக அமையும் எனக் கூறினார்.

பாஜக மாவட்ட தலைவராக இருந்த டாக்டர் சரவணனுக்கு திமுகவிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ஏற்கனவே டாக்டர் சரவணன் ஒரு மாத காலமாக திமுகவிற்கு செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருந்தது. அமைச்சர் வாகனங்களில் தாக்குதல் நடந்த சம்பவத்தால் தான் டாக்டர் சரவணன் கட்சியை விட்டு வெளியேறினார் என்பதை காரணமாக சொல்ல முடியாது எனக் கூறினார்.

அண்மைச் செய்தி: ‘இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவர் ‘முரசொலி மாறன்’’

தொடர்ந்து பேசிய அவர், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரதமர் கலந்து கொண்டு நட்புறவோடு நிகழ்ச்சிகள் நடைபெற்றதாகவும் இதனை வைத்து திமுக பாஜகவுடன் நெருங்கிறது என சொல்லமுடியாது என கூறினார். மீண்டும் பாஜக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மோடி பிரதமர் ஆவார். எப்போதும் பாரதிய ஜனதா கட்சி ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளது. எங்களுடன் நட்பா நட்பில்லையா என்பதை திமுக தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்த அவர், அதிமுகவுடன் பாஜக கூட்டணி என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. ஓபிஎஸ்-ஆக இருந்தாலும் சரி இபிஎஸ்-ஆக இருந்தாலும் சரி அதிமுகவுடன் தான் பாஜக கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளது எனக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.