சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைக்காக இன்று நடை திறக்கப்பட்டுள்ளது. நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி, நாளை புதிய தந்திரியாக கண்டரரு ராஜீவரு பதவி ஏற்கிறார்.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மாத துவக்கத்திலும் ஐந்து நாட்கள் நடை திறந்து பூஜைகள் நடைபெற்று வரும். ஆவணி மாத பூஜைக்காக இன்று நடை திறக்கப்பட்டன,புதிய தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஷ்வரன் நம்பூதிரி நடை திறந்தனர்.இன்று மாலை பூஜைகள் எதுவும் நடைபெறாத நிலையில் நாளை புதிய தந்திரியாக கண்டரரு ராஜிவரரு பொறுப்பேற்பார்.
அதன்பின்பு நிர்மால்ய தரிசனம், அஷ்டாபிஷேகம் ஆகியவை நடைபெறும். இதன்பின் கோவிலின் கிழக்கு மண்டபத்தில் தந்திரி கண்டரரு ராஜிவரரு தலைமையில் கணபதி ஹோமம் நடைபெறும். இதன்பின்னர் லட்சார்ச்சனையும் நடத்தப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை நடைபெறும், அதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கபடுகிறது. மீண்டும் ஓணம் பண்டிகை பூஜைகளுக்காக செப்டம்பர் 6-ந்தேதி கோவில் நடை திறக்கப்படும், இதற்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளது.







