இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்டது தான் திமுக ஆட்சி- எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி தான் திமுகவின் ஆட்சி என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  மதுரை வலையங்குளம் பகுதியில் நடைபெற்ற, மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் விழாவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர்…

தமிழ்நாட்டில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி தான் திமுகவின் ஆட்சி என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

மதுரை வலையங்குளம் பகுதியில் நடைபெற்ற, மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் விழாவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். அண்மையில் அதிமுகவில் இணைந்த டாக்டர் சரவணன் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உண்மையில் 90% வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

இதையும் படிக்கவும்: யுகேஜி சிறுமியை ஃபெயிலாக்கிய பெங்களூரு பள்ளி…

ஊழலை பற்றி பேச எனக்கு தகுதி இல்லை என்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு. எதிர்க்கட்சியான அதிமுக தான் ஊழலை பேச தகுதி உள்ள கட்சி. ஐ.எஸ்.ஐ முத்திரை போல திமுக அரசுக்கு ஊழல் முத்திரை குத்தப்பட்டுள்ளது.ஊழல் செய்வதில் முதல் மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுகவின் ஆட்சி. திமுகவில் தற்போது இருக்கும் 8 அமைச்சர்கள் அதிமுகவில் இருந்தவர்கள் தான். எனவே அதிமுகவை பேசும் தகுதி திமுகவிற்கு இல்லை என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக அரசின் ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட பல திட்டங்கள் இப்போது கிடப்பில் போடப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு ரிப்பன் கட் பண்ணும் வேலையை தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார்.

திமுக ஆட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தில் ரூ.500 கோடி
வரை ஊழல் நடந்துள்ளது. ஏழை மக்களுக்கான இந்த திட்டத்தில் கூட ஊழல் செய்த ஒரே கட்சி திமுக தான். மின் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க சொல்கிறார்கள். அப்படி இணைத்தால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும். மேலும் பல மின்சார மானியங்கள் ரத்தாகும் என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.