மன்னார்குடியில் திமுகவினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அரசு கல்லூரியில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்பதற்காக, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், அக்கட்சியின் கையூட்டு, ஊழல் ஒழிப்பு பாசறையின் மாநில தலைவர் ராம அரவிந்தனோடு கல்லூரிக்கு வந்துள்ளனர். அப்போது நாம் தமிழர் கட்சியினருக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியது.
இதையும் படியுங்கள் : ”பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை வெளியிடுவேன்” – பழ.நெடுமாறன்
இதில் நாம் தமிழர் கட்சியின் கையூட்டு, ஊழல் ஒழிப்பு பாசறையின் மாநிலத் தலைவர் ராம அரவிந்தன் தாக்கப்பட்டார். அவரது வாகனமும் தாக்குதலுக்குள்ளானது. இதனையடுத்து மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ராம அரவிந்தன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். திமுக, நாம் தமிழர் கட்சியினர் இடையே ஏற்பட்ட இந்த மோதல் சம்பவம் மன்னார்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.