மதுரையில் பள்ளி நூலகத்தைப் பார்வையிட்ட தமிழக டிஜிபி சைலேந்திர பாபு

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் அல்அமீன் மேல்நிலைப்பள்ளியின் நூலகத்தை தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் பார்வையிட்டு தான் எழுதிய புத்தகங்களை பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கினார். மதுரை மாவட்டம், கோ. புதூர்…

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் அல்அமீன் மேல்நிலைப்பள்ளியின் நூலகத்தை தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் பார்வையிட்டு தான் எழுதிய புத்தகங்களை பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கினார்.


மதுரை மாவட்டம், கோ. புதூர் பகுதியில் அரசு உதவிபெறும் அல்அமீன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 6 முதல் 12 வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகின்றனர். இதை தொடர்ந்து இப்பள்ளியில் புத்தகம் வாசிப்பு இயக்கம் தொடங்கி மாணவர்கள் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை வளர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்பள்ளியில் உள்ள புத்தக இயக்கத்தை அறிந்த தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பள்ளி நூலகத்தை பார்வையிட்டுள்ளார். இதனை அடுத்து அவர் தான் எழுதிய புத்தகங்கள் மற்றும் சிறு கதை நூல்கள் போன்றவற்றை பள்ளிக்கு அன்பளிப்பாக கொடுத்து சென்றுள்ளார்.

 மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக டிஜிபி புத்தகங்களை வழங்கி உள்ளார்.  ஏற்கனவே தமிழ்நாடு முதலமைச்சர் மு .க ஸ்டாலின்  200 புத்தகங்கள் வழங்கியது குறிப்பிட்ட தக்கது.


-கோ. சிவசங்கரன்.


சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.