முக்கியச் செய்திகள் தமிழகம்

”பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை வெளியிடுவேன்” – பழ.நெடுமாறன்

பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கான ஆதாரம் கிடைத்தவுடன், அதனை ஊடகத்தினர் முன்பாக வெளியிடுவேன் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள கிருஷ்ணய்யர் அரங்கில், தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் ஆகியோர் பங்கேற்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த பழ.நெடுமாறன், ”பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று நான் கூறியதற்கு யாரும் உடன்படவில்லை என்று சொல்வது மிகவும் தவறானது. பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று நான் கூறியது, ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் புதிய நம்பிக்கையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.

இதையும் படியுங்கள் : ”வடமாநில தொழிலாளர்கள் பயப்பட வேண்டாம்” – திருப்பூர் காவல் ஆணையர் பிரவீன் குமார்

பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கான ஆதாரம் கிடைத்தவுடன், அதனை ஊடகத்தினர் முன்பாக வெளியிடுவேன். பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற தகவலை கூறிய பின்னர் மக்கள் ஆதரவு அதிகமாக கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.

கடந்த பிப்.13ம் தேதி, செய்தியாளர்களை சந்தித்த பழ.நெடுமாறன், தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தெரிவித்தார். இவரது கருத்துக்கு பலர் ஆதரவு தெரிவித்த நிலையில், சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அனல்காற்று எச்சரிக்கை: 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டிய வெயில்

எல்.ரேணுகாதேவி

அதானியை பிரதமர் பாதுகாக்கிறார்- ராகுல்காந்தி குற்றச்சாட்டு

Jayasheeba

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசிபெருவிழா தேரோட்டம் – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

Syedibrahim