நெக்ஸ்ட் தேர்வை எதிர்த்து திமுகவினர் போராட வேண்டும் – திருச்சி சிவா

நீட் தேர்வை எதிர்த்து போராடிவரும் நிலையில், சத்தமில்லாமல் அடுத்து வரும் நெக்ஸ்ட் தேர்வை எதிர்த்து திமுகவினர் போராட வேண்டுமென திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற திமுக திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டத்தில் கட்சியினருக்கு கழக கொள்கை…

நீட் தேர்வை எதிர்த்து போராடிவரும் நிலையில், சத்தமில்லாமல் அடுத்து வரும் நெக்ஸ்ட் தேர்வை எதிர்த்து திமுகவினர் போராட வேண்டுமென திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற திமுக திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டத்தில் கட்சியினருக்கு கழக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா அழைப்புவிடுத்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் மாவட்ட கழக செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் நடைப்பெற்றது. இதில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து 500க்கும் அதிகமான திமுக இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா மற்றும் கழக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரச்சன்னா ஆகியோர் கலந்து கொண்டு இளைஞரணியினருக்கு திராவிட வரலாறு மற்றும் மாநில சுயாட்சி குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

கூட்டத்தில் பேசிய மாநிலங்களவை உறுப்பினரும் திமுக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா பேசும்போது… மருத்துவ கல்வி படிப்பதற்கு முன்பு நீட் தேர்வும், படித்து முடித்ததற்கு பிறகு நெக்ஸ்ட் தேர்வு எழுதினால் மட்டுமே மருத்துவர் என்று அங்கீகரிக்கப்படுவார்கள். நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பின்பு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நெக்ஸ்ட் தேர்வு நடைமுறைப்படுத்தப்படும் என மெடிக்கல் கவுன்சிலின் சட்ட விதி உள்ளது. எனவே நீட் தேர்வை எதிர்த்து திமுக போராடிவரும் நிலையில், சத்தமில்லாமல் அடுத்து வரும் நெக்ஸ்ட் தேர்வை எதிர்த்தும் திமுகவினர் போராட வேண்டுமென அறைகூவல் விடுத்தார்.

பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்று கூறுவது திராவிட மாடல், ஆனால் அதற்கு எதிராக உள்ள சனாதன தர்மத்தை ஆளுநர் தூக்கி பிடித்துள்ளார். எது சரி என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்றார். இந்த கூட்டத்தில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி AKS விஜயன் உள்ளிட்ட ஒன்றிய நகர செயலாளர்கள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.