நீட் தேர்வு கட்டணத்தை உயர்த்தி தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு அறிவிக்கையை தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு ஆங்கிலம், தமிழ், இந்தி உள்பட 13 மொழிகளில் நாடு முழுவதும் 543 நகரங்களில் நடத்தப்படுகிறது. ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 6ஆம் தேதி கடைசி நாளாகும்.
இந்த நிலையில் நீட் தேர்வு கட்டணம் கடந்த ஆண்டை விட ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பொதுப் பிரிவினருக்கான கட்டணம் ரூ.1,500ல் இருந்து ரூ.1,600 ஆக உயர்ந்துள்ளது. EWS, OBC பிரிவினருக்கு ரூ.1,400-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்ந்துள்ளது. மாற்றுத்திறனாளிகள், பட்டியலினத்தவர், 3ம் பாலினத்தவருக்கான கட்டணம் ரூ.800ல் இருந்து ரூ.900 ஆக உயர்ந்துள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்களில் அனைத்து பிரிவினருக்கும் கட்டணம் ரூ.8,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர இணைய வழி கட்டணத்துக்கான செலவு, GST வரியையும் தேர்வர்கள் தனியே செலுத்திட வேண்டும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.







