மார்க்சிஸ்ட் பெண் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

திருத்துறைப்பூண்டி நகராட்சி துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி துணைத் தலைவராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராமலோக…

திருத்துறைப்பூண்டி நகராட்சி துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி துணைத் தலைவராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராமலோக ஈஸ்வரி அறிவிக்கப்பட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் ரகுராமனின் மனைவியான ராமலோக ஈஸ்வரி இன்று தேர்வு செய்யப்பட உள்ள நிலையில் அதிகாலை 2 மணியளவில் அவரது வீட்டின் வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

வீட்டின் சுற்றுச் சுவரை ஏறிக் குதித்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியுள்ளனர். தகவலறிந்து வந்த திருத்துறைப்பூண்டி காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் ஆய்வு செய்ததோடு தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.