திமுக எம்.பி. கனிமொழி வாக்களிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, பாதுகாப்பு கவச உடை அணிந்து மயிலாப்பூர் தொகுதியில் தனது வாக்கினை செலுத்தினார். தமிழ்நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாக்குப்பதிவு…

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, பாதுகாப்பு கவச உடை அணிந்து மயிலாப்பூர் தொகுதியில் தனது வாக்கினை செலுத்தினார்.

தமிழ்நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாக்குப்பதிவு இறுதி கட்டத்தை தற்போது எட்டியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்கள் மாலை 6 மணி முதல் 7 மணி வரை வாக்கு செலுத்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்று நோயாளிகள் தங்கள் வாக்கினை பதிவு செய்ய தொடங்கினர். இந்நிலையில், கொரோனா சிகிச்சைப் பெற்றுவரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மயிலாப்பூர் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்றினார்.

இதேபோன்று, அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் பிபிஇ கிட் அணிந்துவந்து வண்ணாரப்பேட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தார். புதுச்சேரியில் கருவடிக்குப்பம் வாக்குச்சாவடியில், கொரோனாவால் சிகிச்சை பெற்று வரும் பெண் ஒருவர், பாதுகாப்பு கவச உடை அணிந்து வந்து வாக்காளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.