பாமக நிர்வாகியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற மர்ம கும்பல்!

செங்கல்பட்டு அருகே, பாமக நிர்வாகியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். செங்கல்பட்டு ராமபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா. பாமக நிர்வாகியான இவர், சிட்லப்பாக்கம் நகராட்சியில் தூய்மை பணியாளராக…

செங்கல்பட்டு அருகே, பாமக நிர்வாகியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு ராமபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா. பாமக நிர்வாகியான இவர், சிட்லப்பாக்கம் நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் தமது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது, திடீரென அங்கு வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனது.

படுகாயமடைந்த சத்யாவை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.