கோவை மாவட்டத்தில் அதிமுக அரசு அறிவித்த திட்டங்களை திமுக அரசு ரத்து செய்து விட்டதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டி உள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பவானி ஆற்றில் 13 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் நீர் உந்துதல் நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜையை முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேலுமணி, கொரோனா தடுப்பு பணிகளை மாநில அரசு வேகப்படுத்த வேண்டும் என்றார்.
கோவை மாவட்டத்தில் அதிமுக அரசு கொண்டு வந்த 96 திட்டங்களை திமுக அரசு ரத்து செய்து விட்டதாகவும், இதனால் குடிநீர், பாதாளச்சாக்கடை, சாலை மேம்பாடு போன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எஸ்.பி.வேலுமணி கூறினார்.







