ஒலியை விட 9 மடங்கு வேகமாக செல்லக்கூடிய ரஷ்யாவின் ‘சிர்கான்’ ஏவுகணை சோதனை வெற்றி

ஒலியை விட 9 மடங்கு வேகமாக செல்லக்கூடிய ‘சிர்கான்’ என்கிற அதிநவீன ஹைபர்சோனிக் ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த ரஷ்யா அரசு ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. எதிர்காலத்தில்…

ஒலியை விட 9 மடங்கு வேகமாக செல்லக்கூடிய ‘சிர்கான்’ என்கிற அதிநவீன ஹைபர்சோனிக் ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த ரஷ்யா அரசு ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. எதிர்காலத்தில் ஹைபர்சோனிக் ஏவுகணைகளே நாட்டின் முக்கிய பாதுகாப்பு அம்சமாக இருக்கக் கூடும் என அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் முன்னர் தெரிவித்திருந்தார். அதன்படி, சிர்கான் என்ற அதிநவீன ஹைபர்சோனிக் ஏவுகணையை உருவாக்கிய ரஷ்யா, அதனை தற்போது வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

 

ஆயிரம் கிலோ மீட்டர் வரை சென்று இலக்கை அழிக்க கூடிய வல்லமை கொண்ட இந்த அதிநவீன ஏவுகணையை ரஷ்யா உருவாக்கியுள்ளது. ஆர்க்டிக்கில் உள்ள வெண்கடலில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அட்மிரல் கோர்ஷ்கோவ் போர் கப்பலில் இருந்து சிர்கான் ஏவுகணை வெற்றிகரமாக ஏவி சோதனை செய்யப்பட்டுள்ளது. 350 கிலோ மீட்டர் வரை சென்ற ஏவுகணை, அதன் இலக்கை வெற்றிகரமாக தாக்கியதாக ரஷ்ய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை ஒலியை விட 9 மடங்கு வேகமாகச் சென்று இலக்கை தாக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.