முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா தமிழகம் செய்திகள்

“ஒமிக்ரான் பரவலை திமுக அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது” – முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர்

நாடு முழுவதும் தற்பொழுது கிறிஸ்துமஸ் பெரு விழா மற்றும் புத்தாண்டு விழா கொண்டாட்டத்திற்கு தயாராகும் நேரத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவுவதை திமுக அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது “தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் வெகு வேகமாக பரவக்கூடியதாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனை கவனமாக கையாளும் முறையை மத்திய அரசு அறிவித்துள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் தற்பொழுது கிறிஸ்துமஸ் பெரு விழா மற்றும் புத்தாண்டு விழா கொண்டாட்டத்திற்கு தயாராகும் நேரத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளது? என்றும் வைரஸ் பரவலை திமுக அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது” என்றும் கூறியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதனைத் தொடர்ந்து அவர் கூறியதாவது ‘தேவையான எச்சரிக்கை நடவடிக்கையும் தடுப்பு நடவடிக்கையும் அரசு எடுக்க வேண்டும், கொரோனா உருவாகிய போது அன்றைய அதிமுக அரசு எந்த விதமான மருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாமல் எதிர்கொண்டு வெற்றிகரமாக கொரோனாவை கட்டுக்குள் வைத்திருந்தது, இன்றைக்கு எல்லா விதமான மருந்துகளும் எப்படி கையாள வேண்டும் என்பது குறித்தும் நாம் தெரிந்து வைத்துள்ளோம், அதனால் உருமாறிய கொரோனாவை கண்டுபிடிப்பதற்கு தமிழகத்தில் பரிசோதனை மையம் உள்ளதா என்பதை அரசு விளக்க வேண்டும்’.

அதன்பின் ஏற்கனவே வேக்சின் எடுத்துக் கொண்டவர்களும் பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டவர்களும் எந்த மாதிரி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்பதை அரசு விளக்க வேண்டும். பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டவர்களுக்கு ஒரு வருடம் மட்டுமே எதிர்ப்பு சக்தி இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது. பூஸ்டர் தடுப்பூசி போட்டு ஒரு ஆண்டுகள் ஆகிவிட்டது நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறதா? என்று தெரியவில்லை தற்பொழுது வரும் வைரஸ் எவ்வாறு எதிர்கொள்வது சுகாதாரத்துறை மக்களுக்கு விளக்க வேண்டும்.மீண்டும் வைரஸ் பரவல் காரணமாக பொதுமக்களும் விழிப்போடு இருக்க வேண்டும் அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வெளிப்படைத்தன்மையோடு மக்களுக்கு விளக்க வேண்டும்.

வல்லுனர் குழு தமிழ்நாட்டில் வருகின்ற ஜூன் மாதத்தில் மிகப்பெரிய தாக்கம் இருக்கும் என்று கூறுகிறதை தொடர்ந்து அதை எதிர் கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்களுக்கு இரண்டு சதவீதம் பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்ய வேண்டும் என்று அரசு கூறி வருகிறது ஆனால் அது போதாது அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும்.

முன்பு நடந்ததைப் போல மற்றொரு பாதிப்பை இந்த நாடு தாங்காது தற்போது தான் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாம் முன்னேறி வரும் சூழ்நிலையில் மற்றும் ஒரு பாதிப்பு ஏற்பட்டால் இந்த நாடு தாங்காது, அதனால் வல்லுனர் குழுவை அமைத்து உருமாறிய கொரோனா எவ்வாறு பரவுகிறது என்றும் அதன் தன்மை என்ன என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்  கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

2023ம் ஆண்டுக்கான கியூட் தேர்வு தேதி அறிவிப்பு!

EZHILARASAN D

பெத்தேல் நகர் குடியிருப்புகள் அகற்றக் கூடாது: உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்ற மார்க்சிஸ்ட் கட்சி

Web Editor

திமுகவுக்கு ஏன் இந்த பதட்டம்? – அண்ணாமலை கேள்வி

Web Editor