திமுக தேர்தல் அறிக்கை ஒரு டூப்ளிகேட் அறிக்கை என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நேற்று இரவு 7 மணியுடன் பரப்புரை முடிவுக்கு வந்தநிலையில், ஆண்டிபட்டி தொகுதியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், கடந்த 2011 மற்றும் 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும், அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளதாகத் கூறினார்.
2006 இல் திமுக கொடுத்த தொலைக்காட்சி பெட்டி, யார் வீட்டிலாவது தற்போது இருக்கிறதா? எனக் கேள்வி எழுப்பிய ஓ.பன்னீர்செல்வம், திமுக தேர்தல் அறிக்கை ஒரு டூப்ளிகேட் அறிக்கை என அவர் விமர்சித்தார். மேலும் அதிமுக எப்போதும் மக்களுக்கான அரசாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.







