அதிமுகவின் பலவீனத்தை பயன்படுத்தி திமுக அரசியல் செய்வதில்லை என்று அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், கருணாநிதி காலத்தில் நிகழ்ந்ததைப்போல, பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என தெரிவித்தார். வாஜ்பாய் தலைமையிலான அன்றைய பாஜக-விற்கும் இன்றைய பாஜக-விற்கும் நிறைய வேறுபாடு உள்ளது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதிமுக நான்கு அணிகளாகப் பிரிந்திருக்கும் நிலையில், அக்கட்சியின் பலவீனத்தை பயன்படுத்தி திமுக அரசியல் செய்வதில்லை என குறிப்பிட்ட அவர், கொள்கைகளையும் தொண்டர் பலத்தையும் நம்பியே திமுக இருக்கிறது என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : 2020 வீழ்ச்சி, 2021 கோப்பை, 2022 வீழ்ச்சி, 2023…?? – கம்பேக் கொடுக்குமா தோனி & கோ??
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தும் திட்டம் இருப்பதாகவும், அதற்கான சூழல் அமையும்போது உரிய அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.