”பால் உற்பத்தியாளர்கள் நலனை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” – அமைச்சர் மனோ தங்கராஜ்

பால் உற்பத்தியாளர்கள் நலனை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பால் உற்பத்தியை பெருக்கவும், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கால்நடைகளின்…

பால் உற்பத்தியாளர்கள் நலனை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பால் உற்பத்தியை பெருக்கவும், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கால்நடைகளின் நலனை பேணவும், பால் கையாளும் திறனை அதிகரிக்கவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

ஒரு மாநிலத்தின் பால் உற்பத்தி பகுதியில், மற்றொரு மாநிலத்தின் பால் உற்பத்தி நிறுவனம் தலையிடுவதில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், எனவே தான், மத்திய அரசுக்கு தமிழகத்தின் பால் உற்பத்தி பகுதியில் வேறு மாநிலங்களை சேர்ந்த நிறுவனங்களை அனுமதிக்க வேண்டாம் என முதலமைச்சர் கடிதம் எழுதியதாக குறிப்பிட்டார்.

இதையும் படியுங்கள் : 2020 வீழ்ச்சி, 2021 கோப்பை, 2022 வீழ்ச்சி, 2023…?? – கம்பேக் கொடுக்குமா தோனி & கோ??

பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பொது மக்களின் நலன் என இரண்டிலும் எந்த பிரச்னையும் ஏற்படாமல், பார்த்துக்கொள்ளும் பொறுப்பை அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் மனோ தங்கராஜ், இந்த சூழ்நிலையில் யாரும் எந்த சலசலப்புக்கும் அஞ்சவேண்டாம் என்று தெரிவித்துள்ளார். பால் உற்பத்தியாளர்கள் நலனை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.