“ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருப்பதை திமுகவால் பொறுத்து கொள்ளமுடியவில்லை” – மாநில செயலாளர் சண்முகம்!

ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருப்பதை திமுகவால் பொறுத்து கொள்ள முடியவில்லை என்று மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

கோவையில் சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மாற்றம் வேண்டும் என்ற அடிப்படையில் மக்கள் தவெகவிற்கு வாக்களித்துள்ளார்கள்.

ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருப்பதை திமுகவால் பொறுத்து கொள்ளமுடியவில்லை. விரைவில் தேர்தல் வரும் என்று ஸ்டாலின் சொன்னது இப்போது தான் புரிகிறது. இப்போது கோடிக்கணக்கான ரூபாய்க்கு விலை பேசி எம்எல்ஏக்கள் வாங்குவது யாராலும் ஏற்றுகொள முடியாது. இதற்கு பின் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டபேரவை தேர்தலில் திமுக, அதிமுக அல்லாத கட்சி வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.
கட்சி ஆரமித்து 2 ஆண்டுகளில் தவெக ஆட்சிக்கு வந்து இருக்கின்றது. இடதுசாரி கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தொடர்கின்றது. மக்கள் தீர்ப்பை ஏற்க மறுத்து குதிரை பேரம், கழுதை பேரம் போன்றவற்றை நடத்துகின்றனர்.

ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றபட்ட தாங்கள் எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என திமுக முயல்கின்றது. அதிகாரத்தில் இல்லை என்பதை திமுகவால் ஏற்க முடியவில்லை. ஸ்டாலின் விரைவாக ஆட்சி மாற்றம் வரும் என்று சொன்ன பின்னணியையும் பார்க்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்கள் தானாக மாறுவது என்பது சாதாரண விடயம். விரும்பிய கட்சியில் சேருவது என்பது வேறு, விலை பேசி வாங்குவது வேறு. குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் மீது முறையாக சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதிமுக 4 எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்த போதே ஆரோக்கியமற்ற அரசியல் என தெரிவித்தோம்.

அவர்கள் தானாக முன் வந்து ராஜினாமா செய்தால் நீங்கள் ஏன் சேர்த்து கொள்கின்றீர்கள் என தவெக நிர்வாகிகளிடம் கேட்டோம். டெல்லி பிரதிநிதி என்பவர் முதல்வரின் தனிபட்ட முடிவு. இதற்கு முன்பு இருந்த டெல்லி பிரதிநிதிகளும் முக்கிய முடிவுகளை எடுக்கவில்லை. இடதுசாரிகள் தனித்து செயல்படுவது என முடிவு செய்துள்ளோம். எந்த அணியிலும் இல்லை. திமுக கூட்டணியில் இருந்தால் போற்றுவது, வெளியேறி விட்டால் அவதூறு என்பது நீண்டகாலமாக செயல்படுகின்றனர். கன்னியாகுமரி அணுகனிம சுரங்க திட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.