GOLD RATE | தங்கம் விலை அதிரடி உயர்வு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை சர்வதேச பொருளாதார நிலைகளுக்கு ஏற்ப மாற்றம் கண்டு வருகிறது. இதனிடையே நேற்று தங்கம் விலை குறைந்துள்ளது. இதனிடையே தங்கம் விலை நேற்று காலை கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் குறைந்திருந்த நிலையில், மாலையில் கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் உயர்ந்தது. ஆக மொத்தம் நேற்று முன்தினம் விலையைவிட நேற்று கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 250-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.

இந்நிலையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.13,400-க்கு சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,07,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.