கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கும் பணி: திமுக தீவிரம்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் பணியில் அக்கட்சி தீவிரப்படுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,…

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் பணியில் அக்கட்சி தீவிரப்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 10 கட்சிகளுக்கு இதுவரை 57 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

திமுக சின்னத்தில் 187 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியிடப்படும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 57 தொகுதிகள் எவை.. எவை என்பது குறித்து இன்றே அறிவிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் திமுக தேர்தல் குழுவுடன் இன்று அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.