5 மாத கர்ப்பிணியாக இருந்த போது உயிரை மாய்த்துக்
கொள்ளும் எண்ணம் வந்ததாக இங்கிலாந்து இளவரசி மேகன் மார்கெல் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து இளவரசர் ஹாரியும் அமெரிக்க நடிகை மோகனும் காதலித்து அரச குடும்பத்தின் ஒப்புதலோடு கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். எனினும் அரச குடும்பத்துடன் பற்று இல்லாமல் இருந்த அவர்கள் கடந்தாண்டு அரச குடும்பத்தில் இருந்து வெளியேறி தற்போது கலிபோர்னியாவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதி இணைந்து பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ப்ரேவுக்கு நேர்காணல் அளித்துள்ளனர்.
அப்போது, 5 மாத கர்ப்பிணியாக இருந்த போது இளவரசி கேட் தன்னை அழவைத்ததாக மேகன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், எனது குழந்தை கருப்பாக இருக்கும் என்பதால், இளவரசராக ஏற்றுக்கொள்ள அரச குடும்பத்தினர் மறுத்தனர். மேலும், தனக்கு அந்த சமயத்தில் உயிரை மாய்த்துக்
கொள்ளும் எண்ணம் வந்ததாகவும் மேகன் தெரிவித்துள்ளார்.







