குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு, விவகாரத்து முடிவை கைவிட்டுள்ளதாக நடிகர் நவாசுதீன் சித்திக்கும் அவரது மனைவியும் தெரிவித்துள்ளனர்.
ரஜினிகாந்தின் ’பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்தவர், பிரபல இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக். இவர் ஆலியா என்பவரை பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, சில மாதங்களுக்கு பிரிந்து வாந்து வந்தனர்.
அதையடுத்து ஆலியா, விவாகரத்து கேட்டு நவாசுதீனுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். ஆனால் தற்போது நவாசுதீன் சித்திக்கும், ஆலியாவும் விவாகரத்து முடிவை கைவிட்டுள்ளனர். இதுகுறித்து ஆலியா கூறும்போது, ’நடந்ததை மறந்து குழந்தைகளுக்காக சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.







