ஒன்றிய அரசைக் கண்டித்து 20 ம் தேதி போராட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு

ஒன்றிய அரசைக் கண்டித்து 20- ம் தேதி போராட்டம் நடைபெறும் என திமுக கூட்டணி கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திராடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்…

ஒன்றிய அரசைக் கண்டித்து 20- ம் தேதி போராட்டம் நடைபெறும் என திமுக கூட்டணி
கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திராடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு
காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட 11
கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்று வேளாண்
சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு, விலைவாசி உயர்வு, பொதுத்துறை நிறுவனங்களை விற்பது உள்ளிட்ட ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத, நடவடிக்கைகளை கண்டித்து, நாடு முழுவதும் வரும் 20-ம் தேதி போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்று காலை 10 மணிக்கும், தங்களின் இல்லம் முன்பு, கருப்புக்கொடி ஏந்தி, கண்டனப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று தொண்டர்களை 11 கட்சிகளின் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். கடந்த மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமை யில் காணொலி வாயிலாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மேற் கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் 11 கட்சி தலைவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.