முக்கியச் செய்திகள் விளையாட்டு

4 வது டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் இலக்கு

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 2 வது இன்னிங்சில் 466 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட
டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி, டிராவில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன.

இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி, ஓவல் மைதானத்தில் கடந்த 2ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 191 ரன்கள் எடுத்தது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸ்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 290 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து இந்திய அணி தனது 2வது இன்னிங்ஸை தொடங்கியது. ரோகித் சர்மா சிறப்பாக ஆடி சதம் அடித்தார். அவர் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 46 ரன்களும் புஜாரா 61 ரன்களும் எடுத்தனர். கேப்டன் விராத் கோலி 44 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா 17 ரன்களிலும் துணை கேப்டன் ரஹானே ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் விராத் கோலியுடன் ரிஷப் பண்ட் இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடி வந்த
நிலையில், மொயின் அலி பந்துவீச்சில் விராத் கோலி, ஓவர்டோனிடம் கேட்ச் கொடுத்து
அவுட் ஆனார். அவர் 44 ரன்கள் எடுத்திருந்தார்.

பின்னர் ஷர்துல் தாகூர், ரிஷப்புடன் இணைந்தார். இருவரும் அதிரடியாக ஆடினர். ஷர்துல் 72 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து ரூட் பந்துவீச்சில் ஓவர்டோனிடம் கேட்ச் கொடுத்து ஆட்ட மிழந்தார். அடுத்து ரிஷப் 50 ரன்கள் எடுத்த நிலையில் மொயின் அலி பந்துவீச்சில் அவரிட மே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து உமேஷ் யாதவும் பும்ராவும் தலா 25, 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய அணி 148.2 ஓவர்களில் 466 ரன்கள் எடுத்தது.

இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 368 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித் துள்ளது. இதையடுத்து அந்த அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

மழை வெள்ளத்தால் மிதக்கும் வடமாநிலங்கள்: படகில் செல்லும் மக்கள்

Niruban Chakkaaravarthi

எந்த கட்சியினருக்கும் ஆதரவில்லை – டி. ராஜேந்தர்

Gayathri Venkatesan

காவிய மெட்டுக்களை தந்த மெல்லிசை மன்னர்

Jeba Arul Robinson