கேரளாவில் அதிகரிக்கும் தொற்று: தமிழ்நாடு எல்லையில் தீவிர கண்காணிப்பு

கேரளாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்துவரும் நிலையில், நிபா வைரசும் பரவி வருவதால் தமிழ்நாடு எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் நாள்தோறும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நிபா வைரசும் பரவத்…

கேரளாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்துவரும் நிலையில், நிபா வைரசும் பரவி வருவதால் தமிழ்நாடு எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் நாள்தோறும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நிபா வைரசும் பரவத் தொடங்கியுள்ளது. இதனையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள கோவிந்தபுரம், கோபாலபுரம் மற்றும் மீனாட்சிபுரம் உள்ளிட்ட 13 வழித்தடங்களிலும் காவல்துறை மற்றூம் சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள் ளனர்.

கேரளாவிலிருந்து வரும் வாகனங்களை நிறுத்தி இரண்டு டோஸ் தடுப்பு ஊசி செலுத்திய வர்கள் மற்றும் கொரோனா பரிசோதனை செய்தற்கான சான்றிதழ் வைத்து இருப்பவர்கள் மட்டுமே அனுமதித்து வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, இரு மாநில எல்லைகளிலும் பரிசோதனைகள் மேற்கொண்டாலும் நகர பேருந்துகளில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது அவர்களை முறையாக பரிசோதனை செய்வதில்லை. எனவே கட்டுப்பாடுகளை தீவிரப் படுத்த வேண்டும், நோய் தொற்று பாதிப்பு குறையும் வரை அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை மட்டுமே அனுமதித்து, எல்லைகளை மூட வேண்டும்’ என்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.