முக்கியச் செய்திகள் இந்தியா தேர்தல் 2021 தமிழகம் செய்திகள் சினிமா

சென்னை மண்டலத்தில் 15 தொகுதிகளில் திமுக முன்னிலை

சென்னை மண்டலத்தில், திமுக கூட்டணி, 15 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக தலைமையில் ஓர் கூட்டணியும், அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தலைமையில் ஓர் அணியும், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மற்றொரு அணியும் போட்டியிட்டன.சீமான் தலைமையிலான நாம் தமிழா் கட்சி, தனியாக போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் 72.81 சதவீத வாக்குகள் பதிவாகின.

பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் மதியம் 2.30 மணி நிலவரப்படி, திமுக கூட்டணி 147 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 85 தொகுதிகளிலும் முன்னணி வகிக்கிறது.

இந்நிலையில் சென்னை மண்டலத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில், ஆர்.கே.நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க. நகர், எழும்பூர், ராயபுரம், சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர், வேளச்சேரி, மயிலாப்பூர் ஆகிய 15 தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. துறைமுகம் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் முன்னி லை வகித்து வருகிறார்

Advertisement:

Related posts

சசிகலா சொத்துக்கள் முடக்கம்!

Niruban Chakkaaravarthi

பொது வேலைநிறுத்தம் – தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!

Nandhakumar

தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் 19 பேர் உயிரிழப்பு!

Gayathri Venkatesan