தமிழகத்தில் தற்போது நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில், கடலூர் மாவட்டம் விருதாச்சலம் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவை சந்தித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. இன்று 1 மணி நிலவரப்படி தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவை சந்தித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக சார்பில் பாமக வேட்பாளர் ஜே. கார்த்திகேயன் இத்தொகுதியில் போட்டியிட்டார்.







