தீபாவளி பண்டிகை: மதுரையில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 பேர் காயம்!

தீபாவளி  கொண்டாட்டத்தின் போது மதுரை மாவட்ட முழுவதும் ஏற்பட்ட தீ விபத்தில்  26 பேர் காயமடைந்தனர். தீபாவளி பண்டிகையை  பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்தும்,  பட்டாசுகள் வெடித்தும்  நேற்று உற்சாகமாக கொண்டாடினர். இந்நிலையில் தீபாவளி கொண்டாட்டத்தின்…

தீபாவளி  கொண்டாட்டத்தின் போது மதுரை மாவட்ட முழுவதும் ஏற்பட்ட தீ விபத்தில்  26 பேர் காயமடைந்தனர்.

தீபாவளி பண்டிகையை  பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்தும்,  பட்டாசுகள் வெடித்தும்  நேற்று உற்சாகமாக கொண்டாடினர்.

இந்நிலையில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது மதுரை மாவட்டத்தில் பட்டாசு மூலமாக தீ விபத்து ஏற்பட்டது.  பைபாஸ் ரோடு காளவாசல்,  சூர்யா நகர்,  செல்லூர் உள்ளிட்ட 8 இடங்களில்  நடந்த தீ விபத்தில் குழந்தைகள், பெண்கள், சிறுவர்கள் உட்பட 26 பேர் காயமடைந்தனர்.   மேலும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் உடமைகள் எரிந்து நாசமானது.

இதையும் படியுங்கள்:  விதிமுறைகளை மீறி பட்டாசுகள் வெடித்தவர்கள் மீது வழக்கு பதிவு – சென்னை காவல்துறை அதிரடி!

தீ விபத்தில் காயமடைந்த 26 பேரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இவர்களில் 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.  மேலும் 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   பெரிய அளவிலான தீக்காய பாதிப்பு இல்லை என மருத்துவமனை டீன் டாக்டர்.ரத்னவேல் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.