தீண்டாமை ஒழிப்பு சம பந்தியில் தன்னுடன் சேர்ந்து உணவருந்திய முதியவர்களிடம் முதியோர் உதவித் தொகை குறித்தும், குடும்ப நலன் பற்றியும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி விசாரித்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தீண்டாமை ஒழிப்பு முன்னிட்டு காஞ்சிபுரம் குமரக்கோட்டம் என அழைக்கப்படும் முருகர் கோவிலில் சமபந்தி விழா நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ருத்ரய்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் அங்கு உணவருந்த அமர்ந்திருந்த மக்களுக்கு உணவு பொருட்களை பரிமாறிய பின்பு, தானும் சாப்பிட அங்கு அமர்ந்தார். அப்போது, மாவட்ட ஆட்சியருக்கு அருகே உணவருந்திய முதிய வயது பெண்மணிகளிடம் முதியோர் உதவித்தொகை பெறுகிறீர்களா என்பது குறித்தும் அவர்களுடைய குடும்ப சூழ்நிலைகளைக் குறித்தும் கேட்டறிந்தார்.
—சௌம்யா.மோ






