பசங்க பட இயக்குநர் பாண்டியராஜிடம் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.89 கோடி மோசடி செய்த புதுக்கோட்டையைச் சேர்ந்த குமார் என்பவரை குற்ற பிரிவு போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டிராஜ். இவர் பசங்க உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கி திரைப்பட இயக்குநராக உள்ளார். இவருடைய நண்பர் குமார் என்பவர் புதுக்கோட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரபல ஜவுளி கடை நடத்தி வருகிறார். வணிக ரீதியாகவும் நிலம் வாங்கி தருவதாகவும் கூறி திரைப்படஇயக்குநர் பாண்டிராஜிடம் 1 கோடியே 89 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பல்வேறு தவணைகளாக கடனாக பெற்றதாக கூறப்படுகிறது .
மேலும் கடன் தொகைக்காக குமார் தனது நிலத்தை பத்திரப்பதிவு செய்வதாக கூறியுள்ளார். குறித்த நேரத்திற்கு பணமும் தரவில்லை நிலமும் வாங்கித்தரவில்லை எனக் கூறப்படுகிறது.இது குறித்து பலமுறை திரைப்பட இயக்குநர் பாண்டிராஜ் கேட்டபோது ஒரு கட்டத்தில் ஒரு இடத்திற்கான பத்திரத்தை கொடுத்துள்ளார் குமார்.
ஆனால் அந்த பத்திரம் போலியானது என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து திரைப்பட இயக்குநர் பாண்டிராஜ் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
——-ரெ.வீரம்மாதேவி
இயக்குநர் பாண்டிராஜிடம் நிலம் வாங்கித் தருவதாக ரூ.1.89 கோடி மோசடி செய்தவர் கைது!
பசங்க பட இயக்குநர் பாண்டியராஜிடம் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.89 கோடி மோசடி செய்த புதுக்கோட்டையைச் சேர்ந்த குமார் என்பவரை குற்ற பிரிவு போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலை கிராமத்தைச்…






