சாலையோரம் கொட்டப்படும் ரெடிமிக்ஸ் வாகன ஓட்டிகள் அவதி!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியிலிருந்து சிப்காட் செல்லும் சாலையோரம் கொட்டப்படும் ரெடிமிக்ஸ் கலவையால் வாகன ஓட்டிகள் அவதிப்டுகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியிலிருந்து சிப்காட் செல்லும் சாலையில், சாலையின் இரு புறங்களிலும் ஆங்காங்கே ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவை…

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியிலிருந்து சிப்காட் செல்லும்
சாலையோரம் கொட்டப்படும் ரெடிமிக்ஸ் கலவையால் வாகன
ஓட்டிகள் அவதிப்டுகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியிலிருந்து சிப்காட் செல்லும் சாலையில், சாலையின் இரு புறங்களிலும் ஆங்காங்கே ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவை கொட்டப்பட்டுள்ளன. கட்டுமான பணிகளுக்கு எடுத்து செல்லும் வாகனம், அதன் கழிவுகளை சாலையின் ஒரங்களில் கொட்டிவிட்டு சென்று விடுகின்றனர்.

மேலும், அந்த கான்கிரீட் கழிவுகள் கெட்டியாக பாறை போல் இருப்பதால், இரவு நேரங்களில் சாலையோரத்தில் செல்லும் வாகனம், அதில் மோதி விபத்து ஏற்படுவதாக இரு சக்கர வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

சாலையின் ஓரம் கொட்டப்படும் ரெடிமிக்ஸ் கான்கிரீட் கழிவுகளை தடுத்தும், ஏற்கனவே கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

————கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.