ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் பரப்புரையில் ஈடுபட்டார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தினேஷ் குண்டுராவ், கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்ற விளம்பர பலூனை பறக்க விட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் குண்டுராவ், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகளில் 22 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறினார். திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்டிக்கும் மக்களை, பணம் கொடுத்து விலைக்கு வாங்கிவிட முடியாது என்றும் தினேஷ் குண்டுராவ் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்