கடந்த 24 மணி நேரத்தில் 81,466 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த 6 மதத்தில் பதிவான ஒரு நாள் பதிவைவிட அதிகமாகும்!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 81,466 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பானது 1,23,03,131 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,15,25,039 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 6,14,696 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 469 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,63,396 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் தற்போது வரை 24,59,12,587 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 11,13,966 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 13 கோடியை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இதுவரை 7.34 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 5.33 கோடி பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்த நிலையில் இந்தியா உலக நாடுகளுக்கு உதவும் விதமாக தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து வருகிறது. தற்போது வரை நாடு முழுவதும் 6,87,89,138 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 36,71,242 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் தற்போது வரை 28,27,21 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.







