கொரோனா எண்ணிக்கையை குறைத்து காட்டவில்லை: அமைச்சர் சுப்ரமணியன்

தேர்தலுக்காக கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டவில்லை என அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் கலந்து கொண்டார். பின் செய்தியாளர்களை…

தேர்தலுக்காக கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டவில்லை என அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை அரும்பாக்கத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் கலந்து கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தலுக்காக கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டவில்லை, அப்படி காட்டவும் முடியாது.இந்த வாரம் இருபத்தி மூன்றாவது தடுப்பூசி முகாம் நடக்கிறது என்றார்.

மேலும், விரைவில் குஜராத்தை போல் 10 கோடி தடுப்பூசி டோஸ் என்ற இலக்கை அடைந்து விடுவோம்.அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 1000க்கும் கீழ் குறைந்துள்ளது. எனினும் மக்கள் தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழகத்தில் 92% பேர் முதல் டோஸ் செலுத்தியுள்ளனர். ஆனால், ஒரு கோடிக்கு மேலானவர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி உரிய நேரத்தில் செலுத்தவில்லை.தனியார் மருத்துவமனையில் தேங்கியிருக்கும் தடுப்பூசிகளை காலாவதியாவதற்குள் பயன்படுத்த மருத்துவமனை நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.