ஒற்றை மொழியின் ஆதிக்கம் இன்றி, அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும் இந்தியாவைக் காண உறுதியேற்போம் என தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் மொழிகளின் தனித்தன்மையை பாதுகாக்கும் நோக்கிலும், அவற்றிற்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையிலும் ஆண்டுதோறும்
பிப்ரவரி 21-ம் தேதி உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ட்விட்டரில் உலக தாய்மொழி தினச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
https://twitter.com/mkstalin/status/1495603254318833665
அதில், தங்கள் மொழிகளைப் பாதுகாக்கவும் உரிமைகளை நிலைநாட்டவும் போராடிய தியாகியருக்கு தன்னுடைய வணக்கத்தைச் செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒற்றை மொழியின் ஆதிக்கம் இன்றி, அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும், அனைவருக்கும் சமமான இந்தியாவைக் காண நாம் அனைவரும் உறுதியேற்போம் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.







