முக்கியச் செய்திகள் தமிழகம்

கார்ல் மார்க்சின் கொள்கைகள் இந்திய வளர்ச்சியைத் தடுத்தனவா? – ஆளுநருக்கு ராமதாஸ் கண்டனம்

கார்ல் மார்க்சின் கொள்கைகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தன என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெர்மானிய தத்துவ அறிஞர் கார்ல் மார்க்சின் கொள்கைகள் இந்தியாவுக்கு எதிரானவை என்றும், அவை இந்திய வளர்ச்சிக்கு தடையாக இருந்தன என்றும் ஆளுநர் அர.என்.ரவி கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கார்ல் மார்க்ஸ் எந்த நாட்டுக்கும் எதிராகச் செயல்படவில்லை என்று குறிப்பிட்ட ராமதாஸ், கார்ல் மார்க்சின் கருத்துகளை ஆளுநர் நன்றாக படிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : ஜெயலலிதாவின் தொண்டர்கள் கூட்டணி அமைக்க வேண்டும் – டிடிவி தினகரன்

மேலும் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற பொதுவுடைமை தான் கார்ல் மார்க்சின் கொள்கை என விளக்கமளித்துள்ள ராமதாஸ், அவரின் கொள்கைகளையும், மூலதனம் நூலையும் உலகமே பாராட்டுவதாக தெரிவித்துள்ளார். பாமகவின் கொள்கை வழிகாட்டிகளில் கார்ல் மார்க்சும் ஒருவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கார்ல் மார்க்ஸ் குறித்து முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி அவதூறுகளை பரப்பக்கூடாது என்று கண்டனம் தெரிவித்த அவர், கார்ல் மார்க்ஸ் குறித்த தவறான விமர்சனத்தை ஆளுநர் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பேரறிவாளனை போல் நளினி விடுதலை செய்யப்படாதது ஏன்?- உயர்நீதிமன்ற தீர்ப்பு கூறுவது என்ன?

Web Editor

அதிமுக பொதுக்குழு வழக்கு: மேல்முறையீடு செல்வோம் – கடம்பூர் ராஜூ நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி

Dinesh A

ஊரக உள்ளாட்சி தேர்தல்: பெரும்பாலான இடங்களில் திமுக அமோக வெற்றி

G SaravanaKumar