மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மரியாதை செலுத்தினார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், தமிழ்ச் சமுதாயம் அன்னையாக கொண்டாடுகிற தங்கத்தாரகை, சொற்களால், செயலால், நினைவுகளால் நம்முடன் இருந்து எந்நாளும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களை 75வது பிறந்தநாளில் போற்றி வணங்கினோம். இதயதெய்வம் அம்மாவின் உண்மையான நல்லாட்சியை தமிழ்நாட்டில் மீண்டும் அமைத்திட உறுதி ஏற்றோம் எனப் பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/TTVDhinakaran/status/1628992590967361537?s=20
-ம.பவித்ரா







