முக்கியச் செய்திகள் தமிழகம்

சேவல் சண்டை போட்டிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படுகிறதா? – நீதிபதிகள் கேள்வி

தமிழ்நாட்டில் சேவல் சண்டை போட்டிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படுகிறதா? என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவடி, ராமச்சந்திரபுரத்தில் சேவல் சண்டை போட்டி நடத்த அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த தேசிங்கு ராஜா என்பவர் இந்த வழக்கை தொடர்ந்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தேசிங்கு ராஜா தாக்கல் செய்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கொரோனா காலகட்டத்திற்கு முன்பு சேவல் சண்டை போட்டிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்ததாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆந்திராவில் ஆண்டுதோறும் பாரம்பரியமாக சேவல் சண்டை போட்டி நடைபெற்று வருகிறது என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, சேவல் சண்டைகள் நடத்த அனுமதி வழங்கப்படுகிறதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


மேலும், மனுதாரர் புதிய மனுவையும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் சட்டஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் பொறுப்பேற்பதாக உறுதிமொழி பத்திரத்தை திருநெல்வேலி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளரிடம் வழங்கவும், அதனை நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன்பாக பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“Bye Bye Miss U ரம்மி” – கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தூக்கிட்டு உயிரிழப்பு

Web Editor

கொரோனா பரிசோதனைகள் குறைக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Halley Karthik

மு.க.ஸ்டாலின் தலைமையில் 100 நாட்கள்; அரசு மேற்கொண்ட திட்டங்கள்

G SaravanaKumar