இந்திய அரசியலின் எதிர்காலம் ராகுல் காந்தி என அத்வானி கூறினாரா? – உண்மை என்ன?

This News is Fact Checked by Logically Facts பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியை “இந்திய அரசியலின் எதிர்காலம்” என கூறியதாக கட்டுரை…

This News is Fact Checked by Logically Facts

பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியை “இந்திய அரசியலின் எதிர்காலம்” என கூறியதாக கட்டுரை ஒன்று வைரலாகி வருகிறது. இந்த செய்தியானது உண்மைக்கு புறம்பானது என தெரியவந்துள்ளது.

காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியை “இந்திய அரசியலின் எதிர்காலம்” என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறியதாக சமூக ஊடகங்களில் பதிவு பகிரப்பட்டு வருகிறது. இந்த கருத்து, அருணாச்சல பிரதேச காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் உட்பட பல கணக்குகளில்,  “*ஃப்ளாஷ் நியூஸ்… ராகுல் காந்தி இந்திய அரசியலின் ஹீரோ: லால் கிருஷ்ண அத்வானி* முன்னாள் உள்துறை அமைச்சர் லால் கிருஷ்ண அத்வானி, ராகுல் காந்தி பற்றி ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். @INCIndia” என பகிரப்பட்டுள்ளது.

இந்த பதிவு (avadhbhoomi.com) அவத்பூமி என்ற இணைய பக்கத்தில் பகிரப்பட்டிருந்தது. இந்த செய்தி தவறானது என்று Logically Facts உண்மை சரிபார்ப்பில் கண்டறியப்பட்டது. ஒரு சந்தேகத்திற்குரிய தளத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையிலிருந்து இந்த கூற்று உருவானது மற்றும் அத்வானி அத்தகைய கருத்தை தெரிவித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என தெரிய வந்துள்ளது. 

உண்மை சரிபார்த்தல்:

இந்த செய்தியை ஆய்வு செய்த Logically Facts, இந்த செய்தியின் தலைப்பு avadhbhumi.com என்ற இணையபக்கத்தில் கண்டறிந்தனர். “ராகுல் காந்தி இந்திய அரசியலின் நாயகன்: எல்.கே.அத்வானி” என்ற தலைப்பில் இந்தியில் வெளியான இந்த கட்டுரை கடந்த 8-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் இந்த கட்டுரை நீக்கப்பட்டுள்ளது.

அந்த கட்டுரையில், ராகுல் காந்தி போன்ற செல்வாக்கு மிக்க தலைவரை இதுவரை பார்த்ததில்லை என்று அத்வானி கூறுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கருத்து எங்கு, எப்போது தெரிவிக்கப்பட்டது என்ற விவரங்கள் கட்டுரையில் இல்லை. மேலும் avadhbhumi.com பக்கத்தில் இருந்த செய்தியில் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை.

தொடர்ந்து, செய்தி வெளியிடப்பட்ட முகநூல் பக்கத்தில் மார்ச் 3, 2024க்குப் பிறகு எந்தப்  பதிவிகளும் இல்லை. அதேபோல் இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத மற்றும் வெளித்தோற்றத்தில் தனிப்பட்ட வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. மேலும், சமூக ஊடக வழிகாட்டுதல்களை மீறியதற்காக அவர்களின் யூ டியூப் பக்கம் அகற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய அத்வானியின் உதவியாளர் தீபக் சோப்ரா, “இது முற்றிலும் தவறானது. அத்வானிக்கும் இந்த கட்டுரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று கூறி அந்த கூற்றுகளை நிராகரித்தார். அந்த அறிக்கை குறித்து நம்பகமான செய்தி எதுவும் கிடைக்கவில்லை.

முடிவு:

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இந்திய அரசியலின் எதிர்காலம் ராகுல் காந்தி என்று கூறவில்லை. இந்த கருத்து ஒரு சித்தரிக்கப்பட்ட கட்டுரையில் இருந்து உருவானது. இப்போது அந்த கட்டுரை நீக்கப்பட்டது. எனவே, இந்த கட்டுரையானது தவறானது என்ற முடிவிற்கு வரப்பட்டது. 

Note: This story was originally published by Logically Facts and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective….

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.