பெண்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் என நடிகை ராதிகா தலைமைச் செயலகம் இணையத் தொடர் வெளியீட்டு விழா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், ஜீ 5 மற்றும் ராடான் மீடியா வொர்க்ஸின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் ‘தலைமைச் செயலகம்’ இணையத் தொடரை தயாரித்துள்ளார். இந்த தொடரில் கிஷோர், ஷ்ரியா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அண்மையில், ஜீ 5 ‘தலைமைச் செயலகம்’ தொடரின் டிரெய்லரை வெளியிட்டது. இந்த தொடர் மே 17-ம் தேதி வெளியாகவுள்ளது.
இதையும் படியுங்கள் : ரேபரேலி தொகுதி பரப்புரை – திருமணம் எப்போது என்று கேட்ட தொண்டர்களுக்கு ராகுல் காந்தி பதில்!
இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் பரத், சரத்குமார், நிரூப், நடிகைகள் ராதிகா சரத்குமார், தர்ஷா குப்தா, இயக்குனர்கள் வசந்தபாலன், சந்தான பாரதி, இசையமைப்பாளர் சித்தார்த் விபின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேடையில் பேசிய நடிகை ராதிகா சரத்குமார், “ஜீ 5 உடன் இணைந்து தயாரிக்கும் வெப் சீரிஸ் ‘தலைமைச் செயலகம்’. இதை துவங்கியதில் இருந்து அந்த பயணம், தலைமைச் செயலகத்திற்கு செல்வது போல போராட்டமாக இருந்தது. சரத்குமார் – நாட்டாமை இல்லாமல் எதுவும் நடந்திருக்காது. நீ எந்த கவலையும் இல்லாமல் தைரியமாக செய். நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்வார்.
தொடர்ந்து இரவு பகலாக, ஷூட் இருக்கும். டப்பிங், அரசியலில் நிறைய இருக்கும். இருந்தாலும் இரவு 2 மணி ஆனாலும் வேலையை பார்ப்பார். பிரசாரத்திலும் அப்படி தான் இருந்தார். அவருக்கு நான் நன்றி சொல்வது நன்றாக இருக்காது. அவர் வாழ்க்கையில் நிறைய விஷயங்களை பார்த்துவிட்டார். ஆனால் சீரிஸ் அவருக்கே சற்று கடினமாக தான் இருந்தது. கஷ்டம் என்று இல்லை. 8 எபிசோட்ஸ் என்பது கிட்டத்தட்ட 2, 3 படம் போல.
இதையும் படியுங்கள் : “11 ஆண்டுகள் திருமண வாழ்வில் இருந்து பிரிகிறோம்” – ஜி.வி.பிரகாஷ், சைந்தவி அறிவிப்பு!
பெண்களை பொறுத்த வரை நிறைய விஷயங்கள் மாறி இருக்கிறது. பெண்களும் வளர்ந்தால் நிச்சயம் சிறப்பாக செயல்பட முடியும். ஆனால் சினிமாவில் மட்டும் அது வேறு கதை. தமிழ்நாட்டில் உள்ள எம்எல்ஏக்களில் 12 பேர் தான் பெண் சட்டமன்ற உறுப்பினர்கள். மேலும், 2 பேர் பெண் அமைச்சர்கள். அரசியலில் பெண்கள் முன்னேற முடியாமல் யார் தடுக்கிறார்கள்? என்ற கேள்விக்கு, சில நேரங்களில் பெண்கள் அந்த சூழ்நிலையை பார்த்து பின்வாங்கி விடுகிறார்கள். பெண்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும்“
இவ்வாறு அவர் தெரிவித்தார்.







