மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 1,400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை நீர்தேக்கம் 60 சதுர மைல் பரப்பளவு கொண்டது. தமிழ்நாட்டின் குடிநீர் மற்றும் பாசனத்துக்கு உயிர் நாடியாக மேட்டூர் அணை திகழ்கிறது. இந்த அணையின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், அரியலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்கள் பாசன வசதி பெறுகிறது. இதைத் தவிர மேட்டூர் அணை மற்றும் காவிரி ஆற்றிலிருந்து பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலமாக குடிநீர் எடுத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடைகிறது.
சில நாட்களாக கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 33 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 57 கன அடியாக இருந்தது. தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 57 கன அடியிலிருந்து 138 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!
தற்போது குறுவை , சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 1,400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.








