19 அவது ஐபிஎல் தொடரானது வரும் 28 ஆம் தேதி தொடங்க உள்ளது. 5 மாநில தேர்தலை கருத்தில் கொண்டு முதல் 20 நாட்களுக்காக போட்டி அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து அணிகளும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ருத்ராஜ் கெய்க்வாடின் தலைமையில் களமிறங்கும் சென்னை அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான காணொளிகளை அவ்வப்போது அணி நிர்வாகம் வெளியிட்டு வருகிறது.
இந்த சூழலில் சென்னை அணியில் முன்னாள் கேப்டன் தோனியின் பங்கு குறித்த கேள்விகள் எழுத்து வந்தன. 2023-ல் சென்னை அணி கோப்பையை வென்றதிலிருந்து, தோனியின் ஓய்வு குறித்த யூகங்கள் ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் ஒரு நிலையான பின்னணியா இருந்து வருகின்றன. இருப்பினும், அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
மினி ஏலத்தின் போது, சென்னை அணி நிர்வாகமானது ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோரை ராஜஸ்தானுக்கு விட்டுக்கொடுத்து, சஞ்சு சாம்சனை பெற்றது. அதன் படி ரூ.18 கோடிக்கு சஞ்சு சாம்சனை சென்னை அணி வாங்கியுள்ளது.
ஐபிஎலின் கடந்த சில ஆண்டுகளாகவே போட்டியின் போது பேட்டிங்கில் கடைசி இரண்டு ஓவர்கள் மட்டுமே தோனி களமிறங்குகிறார். மேலும் ஃபீல்டிங்கின் போது முழுமையாக கீப்பிங் செய்கிறார். இந்த சூழலில் சென்னை அணி சஞ்சு சாம்சனை வாங்கியது தோனியின் இடத்தை நிரப்பவே என கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை அணியில் தோனியின் ஆறாவது இடத்திற்கு முன்னேறி பேட்டிங் செய்ய வேண்டும் என்று முன்னாள் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் வீரர் ஏ.பி. டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது ; எம்.எஸ். தோனி கேப்டனாகச் செயல்படாமல், 8 அல்லது 9-வது இடத்தில் பேட்டிங் செய்யும் பொறுப்பை மட்டும் ஏற்றால், அவர் ஒரு இடத்தை நிரப்புவதற்காக மட்டுமே அங்கு இருக்கிறார் என்றும் அது தவறானது என்றும் நான் உணர்கிறேன். அது அவர் இருக்கத் தகுதியான இடம் அல்ல. அவர் அதிகபட்சமாக ஆறாவது இடத்திற்கு முன்னேறி பேட்டிங் செய்ய வேண்டும். சில சமயங்களில் அவர் 5 அல்லது 4-வது இடத்தில் கூட விளையாடுவதை நான் விரும்புகிறேன்







