#IPL2026 | ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் அபார வெற்றி!

குஜராத் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.

19 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெறும் 52-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் அணி – குஜராத் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்ததும், குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதனோடி முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது.

இதனால், 230 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. அந்த அணியின் கேப்டன் ஜெய்ஸ்வால் 3 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி ஏற்படுத்தினார். வைபவ் சூர்யவன்ஷி 36 ரன்கள் எடுத்திருந்தபோது சிராஜ் பந்து வீச்சில் அர்ஷத் கானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இறுதியில் ராஜஸ்தான் அணி 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களே எடுத்திருந்தது. இதனால், குஜராத் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.