தமிழகத்தில் வரும் காலங்களில் உள்ள சுற்றுலா தலங்களை வெவ்வேறு கோணங்களில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தன்னார்வ அமைப்பின் சார்பில் அரசு மருத்துவமனைக்கு,முன்களப்பணியர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் சிறப்பு அழைப்பாராக பங்கேற்றார்.
இதன் பின்னர் தன்னார்வ அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு 31ஆக்சிசன் சிலிண்டர்,10ஆக்சிசன் செறிவூட்டும் கருவிகள் மற்றும் அம்மா உணவகத்ததிற்கு தேவையான 25கிலோ எடை கொண்ட 40மூட்டைகள், 600 முன் களப்பணியளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் உள்ளிடவை வழங்கினார்.இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன்,
நாமக்கல் மாவட்டத்தில் நலிவடைந்து வரும் விசைத்தறி கூலித் தொழிலாளி வாழ்வாதாரம் பாதுகாக்க தமிழக அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்வதால் சுற்றுலா துறையில் சங்கமேஸ்வரர் கோவிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இதை தொடர்ந்து பேசிய மதிவேந்தன் தமிழகத்தில் வருங்காலத்தில் அனைத்து சுற்றுலா தலங்களும் பல்வேறு கோணங்களில் வெவ்வேறு மேம்படுத்தப்படும் என்று பேசிய அவர் கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா தலங்களில் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு நிவாரணம் வழங்க முதல்வரிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.







