அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க முதல்வர் தலைமையில் ஆலோசனை!

முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மே 31ம்…

முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மே 31ம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், முழு ஊரடங்கின் போது, பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தங்குத்தடையின்றி விநியோகம் செய்வது தொடர்பாக, சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பன்னீர்செல்வம், தமிழகம் முழுவதும் 13,000 வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை நடைபெற்று வருவதாகக் கூறினார். நேற்று ஒரே நாளில் 4,900 மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.