கரூர் புறநகர் பகுதிகளில் ஊரடங்கை மீறி கடைகள் திறப்பு!

கொரோனா பரவல் காரணமாக அரசு ஊரடங்கு அறிவித்திருக்கும் சூழலில் கரூர் மாவட்டத்தின் புறநகர்ப் பகுதிகளில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். கொரனோ தொற்று பரவாமல் இருப்பதற்காகத் தமிழகம் முழுவதும் முழு…

கொரோனா பரவல் காரணமாக அரசு ஊரடங்கு அறிவித்திருக்கும் சூழலில் கரூர் மாவட்டத்தின் புறநகர்ப் பகுதிகளில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கொரனோ தொற்று பரவாமல் இருப்பதற்காகத் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பின்பு படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கொரனோ தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் கரூர் மாவட்டமும் ஒன்று. இங்குக் காய்கறி கடைகள் திறக்கக் கூடாது, வீதிகளுக்குச் சென்று வாகனங்களில் விற்பனை செய்ய அரசு அறிவித்திருந்தது. இறைச்சிக் கடைகளில் கூட்டத்தைத் தவிர்க்க ஞாயிற்றுக் கிழமைகளில் திறக்கக் கூடாது என அரசு அறிவித்து இருந்தது. இவற்றைக் கரூர் நகரில் பெரும்பாலானோர் கடைப்பிடித்த நிலையில் புற நகர்ப் பகுதிகளான ஆத்தூர் பிரிவு, புன்னம் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் மீன், சிக்கன், மட்டன் உள்ளிட்ட இறைச்சிக் கடைகள் வழக்கம் போல் திறக்கப்பட்டு விற்பனை இறைச்சி விற்பனை நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல், முக கவசம் சரியாமல் அணியாமல் வாங்கிச் செல்கின்றனர்.

காய்கறிகளை விற்பனையைக் கடைகள் மூலம் செய்து வருகின்றனர். மளிகைக் கடைகளில் சமூக இடைவெளி இன்றி பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். கரூர் மாவட்டத்தில் கொரனோ தளர்வுகள் அறிவிக்கப்படாத நிலையில் பொதுமக்கள் சமூக இடைவெளி இல்லாமல் இது போன்ற நடவடிக்கைகளால் கொரனோ பரவும் அபாயம் உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.